சாருவின் வாடிக்கை வாசகன் நான். கருத்து சுதந்திரத்திற்கு முன் உதாரணம் அவர் தான். அவரை பற்றிய முரணான கருத்துக்கும் மதிப்பளிப்பவர் . போதும் பில்ட் அப் . விசயத்துக்கு வருவோம்.
இன்று அவர் எழுதிய கடிதத்தின் பதிலுரையை படித்தேன். ஒரே வரியில் சொல்வதானால் சொதப்பல் . தான் அறிந்ததுதான் உண்மையான உலகம் என்று கருததொடங்கிவிட்டார் போலும். கமல் ஹாசன் ஒரு பேட்டியில் “ஆஸ்கர் பரிசு பெற்றப் படங்கள் அமெரிக்க அளவுகோலுக்கு ஏற்ப எடுக்கப் பட வேண்டியுள்ளது. நான் இந்திய அளவுகோலைப் பின்பற்றுகிறேன். என்னிடம் ISI மார்க் உள்ளது; எனக்கு எதற்கு ASI மார்க்?” என்று பதில் அளித்துள்ளார். இதற்க்கு தான் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார் . கமல் ஹாசன் பொறாமையில் பேசுவதாக கூறி உள்ளார்.
என்னை பொறுத்த வரையில் கமல்ஹாசன் சொன்னதில் எந்த தவறும் இல்லை. சரியாகத்தான் சொல்லி உள்ளார். ஆஸ்கார் விருது வாங்க வேண்டுமென்றால் அமெரிக்க தரத்தில் , ஆங்கில மொழியில் , அவர்களின் அளவுகோலில் எடுத்தால் தான் வாங்க முடியும். இதே கருத்தை தான் A.R. ரஹ்மான் தமிழ் திரை இசை அமைப்பாளர்கள் எடுத்த விழாவில் கூறி உள்ளார். ( பார்க்க ஆனந்தவிகடன் ) . ஆஸ்கார் ஒன்றும் உலகத்தின் தலைசிறந்த படங்களுக்கு வழங்கப்படும் விருது அல்ல. அது ஆங்கில மொழியில் மட்டும் எடுக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதே. என்னுடைய முந்தைய எச்சிற் பெருமை கட்டுரை படியுங்கள் புரியும்.
பத்தாம்பசலித்தனமாக இருக்கிறது சாருவின் இந்த கட்டுரை. தமிழ் நாட்டில் 99% சதவிதம் பேர் இந்த உண்மையை தெரியாமல் இருக்க இவர் போன்றவர்கள் தான் காரணம். A.R.ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது பற்றி இளையராஜாவிடம் இருந்து ஒரு சொல் கிடையாது என்று வேறு சாரு சொல்கிறார். எனக்கு ஒரு சந்தேகம் இவர் இந்த உலகத்தில்தான் இருக்கிறாரா இல்லை கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு என்று வேறு எங்கும் போய்விட்டாரா ? பத்திரிகை, டிவி, இணையம் என்று எல்லா ஊடகத்திலும் ரஹ்மானுக்கு நடந்த பாராட்டு விழாவை பற்றி செய்தி வந்ததே. அங்கே இளையராஜாவின் அருமையான பேச்சையும் காட்டினார்களே ? தன்னை நடுநிலைமையனவர் என்று கூறிக்கொள்ளும் சாரு இளையராஜாவின் மீதுள்ள தனிப்பட்ட ( அது என்ன கதையோ யாம் அறியோம் ) வெறுப்பை தான் இப்படி அபாண்டமான பழியாக காண்பித்து இருக்கிறார்.
ஒரு திரைப்படத்தில் Police Inspector பத்திரிகையாளரிடம் கேட்பார் ” எழுதும் போது என்ன போதையில் எழுதினிங்களா ” என்று . இன்று நானும் அதையே கேட்கிறேன்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை | குறிச்சொற்கள்: charu, kamalhaasan, oscar

Not now, Mr.Kamal already told(three years back) that Oscar is american award.
He is not a capable person as he think about himself and readers are not impressed by his writing about any topic .
for example,one time he wrote a review about “naan kadayul”,he told that he never like bala ,illayaraja but agree that as tamilnadu people celebrating bala since bala came to industry.Now he celebrating bala.
you have to understand one thing from his review as now only he understand bala’s talent but tamil people understood 10 years before.
It means he is atleast 10 years back compare with tamil people (readers/viewers).
whenever he write about kamal or illayaraja ,all readers may laughing about his jelous and incapability.
Your statement is 100% true.
–Ramesh
சரியாக சொன்னீர்கள் கார்த்திக்.
அபாண்டம்.
Thank you ramesh and Surya,
Your responses made me feel that i am going on right way in my writings.
நன்றி கார்த்திக்..
ஒளிப்பதிவாளர் திரு. செழியன் எழுதிய “பேசும் படம்” புத்த்கம் படித்தீர்களா..??
வாசித்து வருகிறேன். இளையராஜாவின் இசை பற்றிய பிரமிப்பூட்டும் செய்திகள்.
கண்டிப்பாக படியுங்கள்.
வாழ்த்துகள்.