பட்டினத்தார் அரசியல்வாதிகளை பற்றி என்ன சொல்கிறார் ?

பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு  பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.

பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்  கென்சொல்வேன் கச்சியேகம்பனே !

முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .

இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது இறக்கும் கடைசி காலம் வரை கொடுக்க மறுக்கும் இவர்களுக்கு என்ன சொல்வேன் கச்சி ஏகம்பனே

இதை விட அருமையான சித்தர் பாடல் ஒன்று உண்டு . அதை நாளை சொல்கிறேன்

2 பதில்கள்

  1. பெரியாண்டவர் ஆலயம் திருநிலை ஈசனை பற்றி எழுதுங்கள்

    • உங்கள் மறுமொழி என்னை ஆச்சர்ய பட வைத்தது. ஒருவேளை இறைவன் என்னை கருவியாக்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத்தான் இந்த நாடகமோ என்று நினைகிறேன்.

மறுமொழி இடுக