மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து

kidscornerமுந்தைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டு , உங்கள் ஆர்வத்தை காண்பித்ததற்கு நன்றி. இந்த பகுதியில் நாம் அடுத்த கட்டத்திற்கு போகலாம். மாணவர்கள் மட்டுமே இல்லாமல் ஆசிரியர்களும் இணைந்து இணையத்தை பயன்படுத்தினால் வளமான மாணவ சமுதாயம் உருவாகும். பொதுவாக பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்வி மேம்பாடு அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

எனது ஆசை இந்த இணையவழி கல்வி மேம்பாடு சராசரி இந்திய பள்ளி மாணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. என் தேடலில் நான் கண்ட அரிய விசயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டு.

இணையம் ஒரு அலாவுதீன் பூதம். இதை சரியாக பயன்படுத்தினால் மாணவர்கள் கையில் உலகம். இதற்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தேவை. ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து செயல்படும் இணைய தளங்கள் கல்வியின் அடுத்த பரிணாமத்திற்கு கூட்டி செல்கிறது

edmodohttp://www.edmodo.com/ – இதில் ஆசிரியர்கள் ஒரு கணக்கை துவங்க வேண்டும். தங்கள் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் உண்டு. Assignments உருவாக்கி அதை மாணவர்களுக்கு தெரிவிக்கலாம். அதுமட்டும் அல்லாது  Notes, Links, Files, Alert, Event என்று உங்கள் மாணவர்களுக்கு அனுப்பலாம். மாணவர்களும் இதி ஒரு கணக்கை தொடங்கி ஆசிர்யர்களின் உதவிகளை பெறலாம். வழக்கமான ஹோம் வொர்க் மாணவர்களை சோர்வடைய வைக்கலாம். இது போன்ற இணையதளங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவை எளிதில் வளர்க்க முடியும். பார்ப்பதற்கு orkut போலதான் இருக்கும். ஆனால் முற்றிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கானது. அருமையான , எளிமையான தளம்.

http://beanbaglearning.com/signup – எனது பத்து வருட இணைய தொடர்பில் இதுபோன்ற மிக எளிமையான Signup ( Creating new accounts )  ஐ பார்த்ததே இல்லை. உங்கள் email id ஐ கொடுங்கள் போதும். உங்கள் email க்கு user id and password  வந்துவிடும். பிறகென்ன உங்கள் கணக்கில் சென்று பார்க்கலாம். இதும் மேலே சொன்னது போலவே தான். அனால் இதில் பெற்றோர்களுக்கும் இடமிருக்கிறது. இன்னொரு வசதி video ஐ கூட பகிர்ந்துகொள்ளலாம். பயம்வேண்டாம்  Adult Videos வராது.

http://yacapaca.com/ – பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் விவரமுள்ள தளம். ஆசிரியர்கள் quizzes, surveys, tests, eportfolios எல்லாம் உருவாக்க முடியும் . Assignments create பண்ணவும் modify பண்ணவும் வசதி உண்டு. இன்னும் பல வசதிகள் உண்டு. பக்காவான தளம்.

இன்னும் ஏராளமான தளங்கள் உள்ளன. ஒவ்வொரு பாட வாரியாக தனித்தனி தளங்கள் உண்டு. தெரிந்துகொள்ள விரும்பினால் பின்னுட்ட மிடுங்கள். எந்த பாடத்தில் உங்கள் ஆர்வம் என்பதையும் தெரிவியுங்கள். விரைவில் இதற்கென்றே தனி வலைபூ ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கிறேன்.

மறுமொழி இடுக