இளையராஜாவின் சிறந்த 10 பின்னணி இசை

இன்று காலையில் எனது கணினியில் வேறொரு file ஐ தேடும் போது இளையராஜாவின் புன்னகை மன்னன் பின்னணி இசையை கேட்க நேர்ந்தது . தேட வந்ததை மறந்து விட்டு இதை கேட்டு கொண்டிருந்தேன். இந்த நிமிடம் வரை எனது மனதில் அந்த இசை தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ராஜாவின் Other Stunning Performance என்னென்ன படங்கள் என்று யோசித்து கொண்டே வந்தேன். இங்கே எனக்கு பிடித்த பின்னணி இசையை பட்டியலிட்டு இருக்கிறேன். இது அகர வரிசை அல்ல. எனக்கு மிகவும் பிடித்தவை அவ்வளவே .
ilayaraja

1. புன்னகை மன்னன்
2. சிகப்பு ரோஜாக்கள்
3. மூன்றாம் பிறை
4. தேவர் மகன்
5. புலன் விசாரணை
6. நாயகன்
7.கடலோர  கவிதைகள்
8.நூறாவது  நாள்
9.மௌன  ராகம்
10.இதயம்

விடுபட்ட திரை இசை படங்கள் , வாசகர்களிடம் இருந்து வந்து கொண்டே இருக்கிறது . அதை அவ்வப்போது இதில் சேர்த்து கொண்டே வருகிறேன்.

11.அபூர்வ  சகோதரர்கள்
12.இதயத்தை  திருடாதே
13.புது  புது  அர்த்தங்கள்
14.தளபதி
15.
அக்னி நட்சத்திரம்
16.மகாநதி
17.சிறைச்சாலை
18.சேது
19.முதல் மரியாதை
20.வெற்றிவிழா
21.நாடோடி தென்றல்

நான் பட்டியலிட்ட படங்களில் பின்னணி இசை இல்லாமல் படங்களை பார்க்க முடியாது என்று அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு பின்னணி இசை பெரும் பங்கு வகித்த படங்கள் இவை.

என் இனிய உலக பட ரசிகர்களே , தயவு செய்து என்னுடன் இந்த விசயத்தில் போட்டி போடாதிர்கள் . ஆ ஊ னா இந்த உலக படத்தில் எப்படி இசை அமைத்திருப்பார்கள் தெரியுமா என்று கதைக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .

மம்மி படம் வந்த புதிதில் பிரமிட் ஐ பற்றி பக்கம் பக்கமாக பேசினார் என் நண்பர் ஒருவர் . அதன் உயரம் , அகலம், தொன்மை , வரலாறு என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தார் ?
மீனாட்சி அம்மன் கோபுரத்தின் உயரம் என்ன ? எத்தனை பெரிய கோபுரம் இருக்கு என்று கேட்டேன் .
அது அது.. என்று இழுத்துகொண்டிருந்தார்
சொந்த ஊரில் இருக்கிற ஒரு பழமையான கோவில் ஐ பற்றி தெரியல ஆனால் பிரமிட்-ஐ பற்றி கதை அளந்துக்கிட்டு இருக்கீங்க. 20000 Km தாண்டி வந்து இந்த கோவில் ஐ  பற்றி கேள்வி பட்டு , பார்த்து விட்டு செல்கிறான். உள்ளூர் காரர் உங்களுக்கு தெரியல  என்றேன்.

சரி விடுங்க அதெல்லாம் நமக்கு எதற்கு ?

18 பதில்கள்

  1. “சொந்த ஊரில் இருக்கிற ஒரு பழமையான கோவில் ஐ பற்றி தெரியல ஆனால் பிரமிட்-ஐ பற்றி கதை அளந்துக்கிட்டு இருக்கீங்க. 20000 Km தாண்டி வந்து இந்த கோவில் ஐ பற்றி கேள்வி பட்டு , பார்த்து விட்டு செல்கிறான். உள்ளூர் காரர் உங்களுக்கு தெரியல என்றேன்.”

    -நம்மாளுங்க திருந்திட்டாலும்….

  2. தளபதி மிக அற்புதமான பின்னணி இசைக்குச் சான்று !!

  3. this list also included
    apoorva sagothararhal,
    ithayathai thirudathey,
    puthu puthu arthangal………………..

  4. முடிந்தால் அபூர்வ சகோதரர்கள் படத்தை mute செய்து சில இடங்களை பாருங்கள் புரியும் .

  5. Pudhu pudhu aarthangal Padathul Raja RR pannave illai…Punnagi mannan track ye balachander use panni kittaru(Late aanadhunala..) …Appave andha kootani pirunjum pochu…

  6. raaja paarvai …

  7. அழகான கட்டுரை

  8. //என் இனிய உலக பட ரசிகர்களே , தயவு செய்து என்னுடன் இந்த விசயத்தில் போட்டி போடாதிர்கள் . ஆ ஊ னா இந்த உலக படத்தில் எப்படி இசை அமைத்திருப்பார்கள் தெரியுமா என்று கதைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்//
    நல்லாச் சொன்னீங்க….
    தொகுப்பு அருமை….
    விடுபட்டவை…
    சேது, காதலுக்கு மரியாதை,முதல் மரியாதை,பிதாமகன்,சிறைச்சாலை,வெற்றிவிழா,குணா,நாடோடி தென்றல் இன்னும் இருக்கு… இப்போ நினைவிலில்லை….

  9. 15. அக்னி நட்சத்திரம்

    இதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமா?

  10. Please add:
    MAHANADHI
    SIRAICHALAI
    Without Raja’s background music, the above movies can not be watched/enjoyed at all.

  11. “நாடோடித்தென்றலை” விட்டுட்டீங்களே..!

  12. [...] Posted on ஜூன்5, 2009 by itsmeena இளையராஜாவின் சிறந்த பின்னணி இசை பற்றிய முந்தைய பதிவிற்கு [...]

  13. Your list says it all. I will also include “Mullum Malarum”.

    Generally, IR’s background score for all of Mahendran and Balu Mahendra’s movies were gems. These directors like to tell the story via visuals and that gave the fertile ground for IR to excel.

  14. Balu mahindra’s வீடு -Raja’s Master Piece

  15. ஹேராம் ராஜா பின்னணியில் கொடிகட்டிப் பறந்த இன்னொரு படம்.

  16. இளையராஜாவின் சிறந்த இசை என்று பத்து இருபதில் முடித்து விட முடியாது. எண்பதுகளில் ஆர்.சுந்தரராஜன் டைரக்ட் செய்து மோகன் நடித்த பல படங்கள் இசைக்காக மட்டுமே வியாபாரம் ஆயின.ஒரு சிறந்த உதாரணம் பயணங்கள் முடிவதில்லை. ராஜாவின் இசையில் சுத்தமாக தலையிடாமல் அவர் சுதந்திரத்துக்கு விடுகிற போது இசை சிறப்பாக அமையும்.

    பெரிய டைரக்டர்கள் என்று கருதப்படும் டைரக்டர்கள் இசையிலும் இன்பிளுயன்ஸ்
    செய்வார்கள். மணிரத்னம் கொஞ்சம் அதிகமாகவே செய்வாரோ என்று அவர் படத்தின் பாடல்களைக் கேட்கிற போது தோன்றும்.

    ஆரம்ப காலத்தில் வந்த கவிக்குயில் என் அபிமான இசைகளில் ஒன்று.

    kgjawarlal.wordpress.com
    kgjawarlal@yahoo.com

மறுமொழி இடுக