அன்பான மனைவி , அழகான குழந்தை , குறைந்த வாடகையில் அருமையான வீடு, வீட்டிற்கு அருகிலேயே கம்பெனி, அதிக பிக்கள் பிடுங்கல் இல்லாத வேலை, நல்ல சம்பளம், மலைப்பாங்கான ஊர் – இப்படி பட்ட அருமையான வாழ்கை அமைந்த நான் சந்தோசமாகதானே இருக்க வேண்டும்.
மனதில் நிம்மதி தானே எப்பவும் நிலவ வேண்டும். நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும் அல்லவா.. ? ஆனால் இல்லை. எட்டு மணி நேரம் தூங்கி வெகு நாட்கள் ஆனது போல உள்ளது. முகத்தை சவரம் பண்ணி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ரசித்து சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எதோ ஒரு சிந்தனையில் தான் எப்போதும் உணவு உண்பதென்ற வழக்கமாகிவிட்டது .
நான் ஏன் இப்படி ஆனேன் ?
ஈழத்தின் மீதான எனது கடைசி நம்பிக்கைகளும் ஒவ்வொன்றாக பொய்த்து போனது. தேர்தலில் தமிழின துரோகிகளுக்கு சரியான தண்டனை கிடைக்கும். ஈழபிரச்சனையில் என்ன செய்வதென்று அறியாது திணறி இருக்கும் மக்களுக்கு தங்களது எதிர்ப்பை பதிய வைத்து அதன் மூலம் இந்த அரசியல்வாதிகளுக்கு தங்கள் உணர்வை புரிய வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். கிடைத்தது செமத்தியான அடி.
தேர்தல் முடிவுக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள். பதுங்கும் புலி பாய போகிறது என்று நினைத்தேன். ஆனால் சிங்கள பேரினவாத எதிரிகள் விரித்த வலையில் சிக்கி வீழ்ந்தது . இரண்டாவது அடி
புலிகள் தலைவர் இறந்ததை இன்று வரை நம்ப வில்லை என்றாலும் , அதை ஒட்டி நடந்த இனவெறி கும்பலின் நாடகங்களும் மக்களின் மனநிலையை வெகுவாக கொன்றும் ,குழப்பியும் வருவது மூன்றாவது அடி.
இறுதி போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் என்றும், இருபதாயிரத்தை தாண்டும் என்றும் வரும் செய்திகள் மன நிம்மதியை, மன உறுதியை , தெளிவை முற்றிலுமாக நொறுக்கியது. ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றும் , வேதனையில் விஷத்தை தாருங்கள் என்று கேட்பதாகவும் வரும் தகவல்கள் மனதை அழத்தூண்டுகிறது .
இதையெல்லாம் கேட்டு நாம்தான் சக்தி அற்று நிற்கிறோம். தமிழக தலைவர்கள் என்ன செய்துகொண்டு இருகிறார்கள்? வென்றவர்கள் டெல்லியில் பதவி பேரம் நடத்துகிறார்கள். தோற்றவர்கள் துண்டை தலையில் போட்டுகொண்டு வீட்டுக்குள் ஒழிந்துகொண்டிருகிறார்கள். ஆனால் யாரும் ஈழமக்களின் இத்தகைய கடும் துயரத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டும் நிதர்சனம்.
இவ்வளவு நாள் ஊழல் செய்தீர்கள் , ரவுடிசம் செய்தீர்கள் , அரசியல் கொலைகள் செய்தீர்கள், வெட்கமே இல்லாமல் பொய்களை சொன்னீர்கள் , பதவிக்கு வந்த பின் மக்களை மறந்தீர்கள், அராஜகம் செய்து தேர்தலில் வென்றீர்கள். எல்லாம் பொருத்துகொண்டோம் . சக மனிதன், சகோதரன் ஈழத்தில் வரலாறு காணாத அளவிருக்கு கொன்று குவிக்க படுகிறான். அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் உங்கள் அரசியலும் பதவியும் உங்கள் கட்சியும், குடும்பமும் தான் முக்கியம் என்று இருந்தீர்களே.. எப்படி பொறுக்க முடியும். உங்களை ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் மக்களுக்கு துரோகம் செய்த ஒவ்வொருவரையும் வரிசையில் நிற்க வைத்து செருப்பால் அடித்தால் என்ன ?
அடித்தால் மட்டும் நீங்கள் திருந்திவிடவா போகிறீர்கள் மானங்கெட்ட ஈனப்பிறவிகள்.
ஆதி இனம், ஆதி மொழி என்ற பெருமைகள் இருந்தும் என்ன பயன் ? ஈனம் இல்லையே . மானம் இல்லையே என்ன செய்ய.. ?
எப்படி எனக்கு நிம்மதி இருக்கும் ? எப்படி நான் நிம்மதியாக தூங்குவேன் ?
முடிவெடுத்துவிட்டேன் அரசியலில் இறங்குவதென்று . எத்தனை நாள் தான் சாக்கடை சாக்கடை என்று ஒதுங்கி போவது.? நான் சாமானியன் தான். அதுதான் என் பலம். சாமானியன் யோசிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று சரித்திரத்தை கேட்டால் கதை கதையாக சொல்லும் . இங்கே நான் என்பது நான் ஒருவன் மட்டும் அல்ல . என்னை போல நூறு பேர் , ஏன் ஆயிரம் பேர் கூட இருக்கலாம். நீதி நேர்மை புடலங்காய் என்று பேசபோவதில்லை. குறைந்த பட்ச மனிதநேயத்தை காப்பாற்றுவது மட்டும் தான் என் நோக்கம். பிறகு தான் மற்றவை.
அடுத்த தேர்தலில் கட்சி சாரா ( அல்லது புதியதொரு இளைய பாரதக்கட்சி ) பல புதிய இளைஞர்கள் உங்களுடன் போட்டிபோட்டால் ஆச்சர்யபடாதீர்கள். திருந்துங்கள் .
இத்தனை ஆண்டுகால அரசியல் அவலங்களுக்கு, அரசியல்வாதிகளின் கொடுமைகளுக்கு ஆப்பு அடிக்கபோவது நிச்சயம்.
காந்தி சொன்னது போல முதலில் சத்தியம் தோற்கடிக்கப்படலாம். ஆனால் அது தோல்வி அல்ல பாடம். இறுதியில் சத்தியம் வென்றே தீரும்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை

வேறு பதிவுக்கு எல்லாம் பின்னூட்ட்ம் போட்டுருக்கின்றார்கள், இந்த பதிவுக்கு பின்னூட்டம் யாரும் போடவேஇல்லை.
என் உள்ளம் குமுறுகின்றது.