Posted on December17, 2009 by itsmeena
துரை என்னை தேடிக்கொண்டு வந்துவிடுவான். வேற எதுக்கு காட்டிற்கு சென்று உரம் போட தான். உரம் போட்டுக்கொண்டே ஊர் கதை எல்லாம் பேசுவோம். துரை குடும்பம் முழுதுமே சினிமா விரும்பிகள். ஒவ்வொருத்தருக்கும் ஒரொரு நடிகர் மேல் அன்பு, காதல், பிரியம், பாசம் எல்லாமே. தமிழ் நாட்டின் பெருவியாதி இது. முந்திய நாள் ரெண்டாம் ஆட்டத்தில் பார்த்த சினிமாவில் ஹீரோ போட்ட சண்டையை விவரிப்பான். பின்னாடி காஞ்சு போனதுகூட தெரியாமல் ஆன்னு கேட்டுகொண்டிருபேன்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்னை பற்றி, கதைகள் | குறிச்சொற்கள்: அனுபவம், ஊர் கதை, காமெடி, ஜாலி, பள்ளி | Leave a Comment »
Posted on ஜூன்30, 2009 by itsmeena
2030 இல் நடப்பதாக சொல்லப்பட்ட அறிவியலும் , வரலாறும் கலந்து புனையப்பட்ட ஒரு சிறுகதை. உங்கள் நெஞ்சை கொஞ்சம் கலங்க வைக்கவும் செய்யலாம்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள், சிறுகதை | 3 மறுமொழிகள் »
Posted on April14, 2009 by itsmeena
கோவிலென்றும் பார்க்காம ஒரு கெட்ட வார்த்தைய சொல்லி திட்டிபுட்டு கிளம்பி வந்தேன். இவன் இருக்க ஊருல நாம இருக்க கூடாதுடானு தோணிச்சு அன்னைக்கு.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள் | குறிச்சொற்கள்: கதை, கதைகள், சாமி | Leave a Comment »
Posted on April11, 2009 by itsmeena
” கிண்டல் , கேலி , நையாண்டி செய்ய யாருக்கும் உரிமை இருக்கு. எதையும் நையாண்டி பண்ணலாம் தப்பில்ல . ஆனா எதைசொன்னாலும் ஒருநல்லது இருக்கணும் அதுக்காகத்தான் என் பேரை காளமேகம்னு மாத்திகிட்டேன். ஒருத்தன் தான் பேர கூட தான் இஷ்டத்துக்கு மாத்திக்க முடியலேனா , எந்த விசயத்தையும் மாத்தமுடியாது , யாரையும் மாத்தமுடியாது .
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கட்டுரை, கதைகள் | குறிச்சொற்கள்: கதை, கதைகள் | Leave a Comment »
Posted on April10, 2009 by itsmeena
நூறு வயசு வரை வாழ்வதெல்லாம் ஒரு வகையில் சாபம். தான் கண் முன்னே தன்னோட நெருங்கி வாழ்ந்த நட்பு, சொந்தம், பந்தம் எல்லாம் செத்த பிறகு , நம்மளோட அருமை , பெருமை தெரியாத ஒரு தலைமுறைட்ட நொக்கு பட்டு , கிழவன் எப்படா சாவான், திண்ணை எப்படா காலியாகும் எல்லோரையும் நினைக்க வச்சுட்டு வாழறதா வாழ்க்கை .
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள் | 1 மறுமொழி »
Posted on April8, 2009 by itsmeena
இந்த கடைசி பென்ச் என்னை விகடன் மாணவ நிருபாராக்கி பார்த்தது. அதன் பிறகு வாழ்கை எனக்கான வேலையின் பாதையை இரண்டாக காண்பித்தது. ஒன்று பத்திரிகை , சினிமா என்று ஒரு புறம் , பன்னாட்டு நிறுவனத்தில் வேலை , பெரிய சம்பளம் என்று ஒரு பாதை . என் குடும்பத்தின் தேவையும் , எதிர்பார்ப்பும் என்னை இந்த இரண்டாவது பாதையில் கொண்டுவந்து விட்டது. குடும்பத்தின் மூத்த பையனாக பிறந்த பிறகு நமக்கென்று கனவு , லட்சியம் எல்லாம் வைத்திருக்க முடியாது. இன்றும் கடைசி பென்ச் எனக்குள் விதைத்த விதை முளைக்கவில்லையே தவிர அழியாமல் தான் இருக்கிறது.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள் | Leave a Comment »
Posted on மார்ச்24, 2009 by itsmeena
பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.
பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்வேன் கச்சியேகம்பனே !
முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .
இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள் | குறிச்சொற்கள்: அரசியல்வாதி, பட்டினத்தார் | 2 மறுமொழிகள் »
Posted on மார்ச்23, 2009 by itsmeena
” அடங்க மறு , அத்து மீறு ” இன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமான வாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் . இன்று அவன் தூக்கிலிடப்பட்ட நாள் . நம்மில் பலருக்கு ஞாபக மறதி அதிகம். அதனால் தான் ஒரு வீரனின் தியாகம் மறக்கப்பட்டு விட்டது. நாமே மறந்துவிட்ட ஒன்றை நாம் எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ? நம் முந்தைய தலைமுறை நமக்கு இதை சொல்ல மறந்ததால் தான் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள் | 6 மறுமொழிகள் »