களம் காண கயமை

கோடிகளில் கைமாறும் அரசியல் – சில
கேடிகள் கைகோர்க்கும் தேர்தல் – பல
பேடிகள் வோட்டு போட
ஜனநாயகத்தை படு குழியில் தள்ள
என்னடா அரசியல் மானங்கெட்ட அரசியல்
எவனடா இங்கு மனம் கொண்ட மனிதன் என்று
இத்தூ.. என்று துப்பினால் – நிஜம் எனும்
எதிர்காற்று என் முகத்தில் அறைந்தது.
புஜம் காட்ட தெரிந்த என்முன்
நிஜம் கேட்ட கேள்விக்கு
என்னால் பதில் சொல்லமுடியவில்லை.
உங்களில் யாரேனும் சொல்ல முடியுமா..?
எத்தனை நாட்கள் உன் தேசத்திற்கு அர்ப்பணித்தாய் ?
எத்தனை முட்கள் நியாயத்திற்காக  சுமந்தாய் ?
களம் காணாமல் கேள்வி கேட்க
உனக்கு என்ன அருகதை உள்ளது [...]

நான் புதிது

நான் புதிது – என்
நிழல் புதிது